மாணவி சோஃபியா வழக்கு - மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு ரத்து
சென்னை, 13 மார்ச் (ஹி.ச) கடந்த 2018 ஆம் ஆண்டு, பாஜகவின் மாநில தலைவராக இருந்த டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் பயணித்த தூத்துக்குடி விமானத்தில் அவருடன் பயணித்த ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோஃபியா, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷம் எழுப்பியுள்ளார். இது தொ
Madras High Court


சென்னை, 13 மார்ச் (ஹி.ச)

கடந்த 2018 ஆம் ஆண்டு, பாஜகவின் மாநில தலைவராக இருந்த டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் பயணித்த தூத்துக்குடி விமானத்தில் அவருடன் பயணித்த ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோஃபியா, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷம் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல்துறையினர் சோபியாவை கைது செய்தனர்

பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

காவல்துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் கூறி சோஃபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி என்பவர் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த புகாரை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம்,

சோஃபியா கைது செய்யப்பட்டதன் மூலம் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகக் கூறி காவல்துறைக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மேலும் பாதிக்கப்பட்ட மாணவி சோஃபியாவுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டிருந்தது.

இழப்பீடு தொகையைச் சம்மந்தப்பட்ட காவல்துறையிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

கடந்த 2022- ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய புதுக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் திருமலை, அப்போதைய தூத்துக்குடி கூடுதல் எஸ்.பி. பொன்ராமு உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஷமீம் அஹமது அடங்கிய அமர்வு, சட்டம்- ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், சம்பவ இடங்களில் எடுக்கும் உடனடி முடிவுகளை குறைக்கூற முடியாது.

குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து புலன்விசாரணையில் தான் தெரியவரும் என்பதால் மனித உரிமைகள் ஆணையம், தனது அதிகார வரம்பை மீறி இணையான விசாரணை நடத்தி, முன் முடிவுக்கு வர முடியாது; எனவே, சோஃபியாவுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

அத்துடன், காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN