உடன்குடி புதிய அனல் மின் நிலையத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆய்வு
தூத்துக்குடி, 13 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தின் மின் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையத்தின் முதல் அலகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத
Minister Anita R. Radhakrishnan


தூத்துக்குடி, 13 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தின் மின் உற்பத்தியைப் பெருக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையத்தின் முதல் அலகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மின் வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் 2X660 மெகாவாட் திறன் கொண்ட திட்டமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

மிக உயர்ந்த நிலை'

(Super Critical) தொழில்நுட்பம் மூலம் 5% கூடுதல் திறன் மற்றும் குறைந்த நிலக்கரி நுகர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிலக்கரியைக் கொண்டு வர 9 கி.மீ நீளமுள்ள பிரத்யேகக் கடல்வழி கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இது ஆசியாவிலேயே தனித்துவமான கட்டமைப்பாகும். நிலத்தடி நீரைச் சார்ந்து இருக்காமல், நாள் ஒன்றுக்கு 13 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் இதன் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மேம்படும் மற்றும் வெளிச் சந்தையில் மின்சாரம் வாங்கும் செலவு குறையும்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குனர் எம்.கோவிந்த ராவ், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் அனல் மின் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Hindusthan Samachar / vidya.b