சிலி நாட்டின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி, 13 மார்ச் (ஹி.ச.) சிலியின் அதிபராகப் பதவி ஏற்றிருக்கும் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் ரிஸ்ட்டுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை இன்று தெரிவித்தார். அத்துடன் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை அதிகப்படுத்த அவரோடு இணைந்து செயல்பட ஆர்வ
சிலியின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து


புதுடெல்லி, 13 மார்ச் (ஹி.ச.)

சிலியின் அதிபராகப் பதவி ஏற்றிருக்கும் ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் ரிஸ்ட்டுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை இன்று தெரிவித்தார்.

அத்துடன் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை அதிகப்படுத்த அவரோடு இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதள பதிவில்,

சிலியின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் ரிஸ்ட்டுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தியாவிற்கும் சிலிக்கும் இடையேயுள்ள இணக்கமான நட்புறவை வலுப்படுத்தவும் வணிகம், தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் நமது ஒத்துழைப்பை அதிகப்படுத்தவும் அவருடன் நெருக்கமாகச் செயலாற்ற விரும்புகிறேன்.

வெற்றி நிறைந்த பதவிக்காலத்திற்கு வாழ்த்துகள்!

என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM