Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 மார்ச் (ஹி.ச.)
கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் பணியில் உள்ள பெண்களுக்கும் மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இத்தகைய சூழலில் எந்தவொரு தனிநபரும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முன்வர மாட்டார்கள் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இது போன்ற சட்டதிட்டங்கள் பாலின ரீதியான தவறான எண்ணங்களை வலுப்படுத்தும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எம்.ஆர். ஷம்ஷாத், சில மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் ஏற்கனவே மாதவிடாய் விடுப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, தாமாக முன்வந்து எடுக்கப்படும் கொள்கைகள் வரவேற்கத்தக்கது, ஆனால் சட்டத்தின் மூலம் இத்தகைய ஏற்பாடுகளை கட்டாயமாக்குவது குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
முறையான பிரதிநிதித்துவம் குறித்து முடிவெடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தகுதிவாய்ந்த அதிகாரி உரிய பிரதிநிதித்துவத்தை பரிசீலித்து சம்பந்தப்பட்ட அனைவருடனும் ஆலோசனை செய்த பின்பு மாதவிடாய் விடுப்பு குறித்த கொள்கையை உருவாக்குவது குறித்து ஆராயலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM