தமிழக காவல்துறையில் உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம்
சென்னை, 14 மார்ச் (ஹி.ச.) ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: தமிழக போலீஸ் உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏடிஜிபியாக இருந்து டிஜிபியாக பால நாக தேவி
Bala Naga Devi Appointed as DGP


சென்னை, 14 மார்ச் (ஹி.ச.)

ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் விபரம் பின்வருமாறு:

தமிழக போலீஸ் உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏடிஜிபியாக இருந்து டிஜிபியாக பால நாக தேவி பதவி உயர்வு பெற்றார்.

பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி சந்தோஷ் குமாருக்கு பொருளாதார ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஐஜி ரூபேஷ் குமார் மீனா குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.

என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b