Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மார்ச் (ஹி.ச.)
தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய அதிரடி சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 71,37,755 மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளரின் மேற்பார்வையிலான சிறப்புப் படையினர், பிளாட்பார்ம் எண் 7-ல் ரேணிகுண்டாவிலிருந்து வந்த ரயிலில்
(வண்டி எண்: 17313) சோதனை நடத்தினர்.
அப்போது, திருப்பதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு (36) என்பவரிடம் இருந்து 2.86 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.8,00,800 ஆகும்.
அதே ரயிலில் வந்த புரோத்தூரைச் சேர்ந்த ஷேக் முனவர் பாஷா (60) என்பவரிடம் இருந்து 433 கிராம் எடையுள்ள 83 தங்க வளையல்கள் கைப்பற்றப்பட்டன.
இதன் மதிப்பு சுமார் ரூர 63,36,955 என கணக்கிடப்பட்டுள்ளது.
பிடிபட்ட இருவரும் பொதுப் பெட்டியில் பயணம் செய்துள்ளனர்.
தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவை முறைப்படி பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட தங்கம் வருமான வரித்துறையினரிடமும், வெள்ளி வணிக வரித்துறை அதிகாரிகளிடமும்
மேலதிக சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam