Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மார்ச் (ஹி.ச.)
கரூர் துயர சம்பவம் தொடர்பாக மூன்றாவது முறையாக நாளை
சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராவதற்காக தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
குறிப்பாக தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டார் விஜயுடன் பயணம் செய்ய வந்தனர்.
முன்னதாக தமிழக வெற்றி
கழக தலைவர் விஜய் உடைய கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ஒரு கத்திரிக்கோல் இருந்ததால், அதையெடுத்து எடுத்துச் சொல்ல தடை விதித்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் மீண்டும் பரிசோதனை முடிந்த பின் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் விமானத்தில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜனாவின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் உயர்நாக விஸ்கி இருந்த காரணத்தினால் அவருடைய பையில் இருந்த விஸ்கியை அகற்றிவிட்டு அவரை விமானத்தில் பயணம் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா தனது கைப்பையில் இருந்த விஸ்கியை சென்னை விமான நிலையத்தில் ஒப்படைத்த பின் அவரை சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam