ஹைதராபாத் டோலி சௌக்கியில் அமைந்துள்ள டயர் கடையில் தீ விபத்து
ஹைதராபாத், 14 மார்ச் (ஹி.ச.) ஹைதராபாத்தின் டோலி சௌகி வட்டாரத்தில் இருக்கின்ற மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் இருந்த டயர் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இன்று அதிகாலை தீடீரென தீ பரவியது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட
இன்று அதிகாலை ஹைதராபாத் டோலி சௌக்கியில் உள்ள டயர் கடையில் தீ விபத்து


ஹைதராபாத், 14 மார்ச் (ஹி.ச.)

ஹைதராபாத்தின் டோலி சௌகி வட்டாரத்தில் இருக்கின்ற மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் இருந்த டயர் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இன்று அதிகாலை தீடீரென தீ பரவியது.

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் எந்தவிதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் அதனால் உண்டான உடைமை சேதத்தின் முழு விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

இது தொடர்பாக தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில்,

மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையில் இருந்த அந்த டயர் கடையில் விடியற்காலை சுமார் 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இரண்டு தீயணைப்பு வண்டிகள் விரைவாக வந்து தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் எந்தவிதமான உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM