புதிய ஏசி வாங்கத் திட்டமிடுவோர்க்கான முழுமையான தகவல்
சென்னை, 14 மார்ச் (ஹி.ச.) வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியவுடன், நம் கவனம் எல்லாம் ஏசி வாங்குவதிலேயே இருக்கும். ஆனால், கடைகளில் டன்கள், ஸ்டார் ரேட்டிங்குகள் எனப் பல தேர்வுகள் குழப்பத்தை ஏற்படுத்தும். உங்களுடைய இல்லத்திற்கு ஏற்ற ஏசியை எப்படித் தீர்மான
புதிய ஏசி வாங்கத் திட்டமிடுவோர்க்கான முழுமையான தகவல்


சென்னை, 14 மார்ச் (ஹி.ச.)

வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியவுடன், நம் கவனம் எல்லாம் ஏசி வாங்குவதிலேயே இருக்கும். ஆனால், கடைகளில் டன்கள், ஸ்டார் ரேட்டிங்குகள் எனப் பல தேர்வுகள் குழப்பத்தை ஏற்படுத்தும்.

உங்களுடைய இல்லத்திற்கு ஏற்ற ஏசியை எப்படித் தீர்மானிப்பது? உங்களுடைய நிதிநிலைக்குப் பொருத்தமான ஏசியைத் தேர்ந்தெடுப்பதற்கு சில முக்கிய விவரங்கள் இங்கே.

உங்களுடைய அறைக்கு எவ்வளவு திறன் கொண்ட ஏசி தேவை?:

ஏசி வாங்குவதற்கு முன்பு உங்க அறையின் பரப்பளவைக் கணக்கிடுவது முக்கியம்.

90 சதுர அடி வரை: 0.75 டன் (முக்கால் டன்) போதுமானது.

100 - 120 சதுர அடி: 1 டன் ஏசி சரியாக இருக்கும்.

120 - 150 சதுர அடி: 1.5 டன் ஏசி சிறந்தது.

180 - 240 சதுர அடி: 2 டன் ஏசி அவசியமாகும்.

நீங்கள் தற்போது சிறிய வாடகை வீட்டில் இருந்து பெரிய வீட்டிற்கு மாறினால், 1.5 டன் கன்வெர்டபிள் ஏசி வாங்குவது விவேகமானது. ஏனென்றால், சிறிய அறைக்கு ஏற்றவாறு அதை முக்கால் டன்னாகவோ அல்லது ஒரு டன்னாகவோ மாற்றியமைத்து பயன்படுத்தலாம்.

3 ஸ்டார் vs 5 ஸ்டார்: எந்த ஏசி பயனுள்ளது?:

பெரும்பாலானோர் 5 ஸ்டார் ஏசியே சிறந்தது என்று கருதுகின்றனர். ஆனால், இது உங்களுடைய பயன்பாட்டைச் சார்ந்தது. பிஇ வழங்கும் இந்த ஸ்டார் மதிப்பீடு, ஏசியின் மின்சார சேமிப்புத் திறனைக் குறிக்கிறது.

மின் கட்டணத்தை எப்படி மதிப்பிடுவது?:

உதாரணமாக, ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டும் ஏசி பயன்படுத்துபவராக இருந்தால், 3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஏசிகளுக்கு இடையே ஆண்டுக்கு சுமார் ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை மட்டுமே மின் கட்டண வேறுபாடு இருக்கும்.

ஆனால், 5 ஸ்டார் ஏசியின் ஆரம்ப விலை மிகவும் அதிகம். அந்த அதிகப்படியான விலையை மின் கட்டண சேமிப்பின் மூலம் ஈடுகட்டவே 5 வருடங்கள் வரை ஆகலாம். ஆகையால்:

குறைந்த நேரப் பயன்பாடு (வீடு): 3 ஸ்டார் ஏசி போதுமானது.

அதிக நேரப் பயன்பாடு (அலுவலகம்/நாள் முழுவதும்): 5 ஸ்டார் ஏசி உகந்தது.

3 ஸ்டார்: ஏசியின் விலை குறைவு, ஆனால் 5 ஸ்டாரை விட மின்சாரம் சற்று அதிகமாக செலவாகும்.

5 ஸ்டார்: ஏசியின் விலை அதிகம், ஆனால் மின் கட்டணம் குறைவாக இருக்கும்.

2026-இல் மாறவிருக்கும் ஏசி ஸ்டார் மதிப்பீட்டு விதிமுறைகள்:

ஏசி ஸ்டார் மதிப்பீட்டு முறைகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும்.

2026-இல் பிஇ விதிமுறைகளின்படி, ஐசிர் (ISEER) மதிப்பு 5.6-க்கு மேல் இருந்தால் மட்டுமே அது 5 ஸ்டார் ஏசியாகக் கருதப்படும்.

இதன் காரணமாக பழைய 5 ஸ்டார் ஏசிகள் 4 ஸ்டாராக மாற வாய்ப்புள்ளது. இருப்பினும், இதனால் ஏசியின் தரம் குறைந்துவிடாது. அதே குளிர்ச்சியையும், அதே மின் பயன்பாட்டையும் அது வழங்கும்.

இந்த ஐசிர் (ISEER) என்றால் என்ன?:

ஏசியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரில் ஐசிர் (Indian Seasonal Energy Efficiency Ratio) என்று ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த எண் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஏசி மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் என்று பொருள்.

எந்த மாதத்தில் ஏசி வாங்குவது சிறந்த யோசனை?:

ஏப்ரல், மே மாதங்களில் தேவை அதிகமாக இருப்பதால், சிறந்த பிராண்ட் மற்றும் காப்பர் காயில் ஏசிகள் கையிருப்பில் இருக்காது.

மார்ச் மாதம் நிதி ஆண்டு முடிவடைவதால், நோ காஸ்ட் இஎம்ஐ, ஜீரோ டவுன் பேமெண்ட் போன்ற சலுகைகள் அதிகமாக கிடைக்கும்.

வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பே ஏசியை நிறுவி மன நிம்மதியுடன் இருக்கலாம்.

Hindusthan Samachar / JANAKI RAM