கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு
சென்னை, 14 மார்ச் (ஹி.ச.) பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வென்றுள்ளார். அதுபோல, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்கான
Jnanpith Award Announced for Poet Vairamuthu


சென்னை, 14 மார்ச் (ஹி.ச.)

பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வென்றுள்ளார்.

அதுபோல, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்கான 2003-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.

இவருக்கு 2014-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு இப்போது ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞானபீட விருது அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கவிஞர் வைரமுத்து,

இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. இனி புதிய பாய்ச்சலுடன் என் இலக்கிய பணி தொடரும்.

எனத் தெரிவித்தார்.

பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று அமைப்பு கடந்த 1944-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

இந்த அமைப்பு சார்பில் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது.

இது இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படுகிறது.

கடந்த 1965-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த சங்கர குருப் என்பவருக்கு முதல் ஞான பீட விருது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு 60-வது ஞானபீட விருது வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 1975-ஆம் ஆண்டு ‘சித்திரப்பாவை’ நாவலுக்காக அகிலன் மற்றும் 2002-ல் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் ஞானபீட விருது பெற்றுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b