Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 14 மார்ச் (ஹி.ச)
லடாக் லே எரிந்த நாள் செப்டம்பர் 24 அன்று லே முழுக்க பெரிய அளவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது, லடாக் சட்டசபை இல்லாத ஒன்றியம் பிரதேசமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரியும் லடாக் பகுதியை இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்தக் கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒன்றிய அரசின் சொத்துக்கள் பல சேதப்படுத்தப்பட்டது.
கலவர கும்பல் காவல் நிலையங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களை குறிவைத்ததால், நிர்வாகம் ஊரடங்கை விதித்தது. ஒன்றிய அரசு அதிகாரிகள், இது ஒரு தன்னிச்சையான போராட்டம் அல்ல, ஆனால் இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலவரம். மக்கள் தன்னெழுச்சியாக போராடவில்லை.
திட்டமிட்டு இந்த கலவரத்தை நடத்தி உள்ளனர் என்று குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த வன்முறைக்குச் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தான் காரணம் என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டியது.
வன்முறை தூண்டும் வகையில் வகையில் பேசியதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சோனம் வாங்சுக்கை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை உடனடியாக ரத்து செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
இதனால் கடந்த 6 மாதங்களாக சிறையில் உள்ள சோனம் வாங்சுக் விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b