Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மார்ச் (ஹி.ச.)
ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான சாரல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒன்று இரண்டு இடங்களில் லேசான தூறல் மழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வறண்ட நிலையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிரதேசங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை அளவில் பெரிய மாறுதல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை எனவும், இருந்த போதிலும் கொஞ்சம் அதிகரிக்கலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகங்கள் சூழ்ந்து காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸ் வரை பதிவாகலாம், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM