Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மார்ச் (ஹி.ச)
சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பரங்கிமலை ரயில் நிலையத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பறக்கும் ரயில் சேவையை வரவேற்று பறக்கும் ரயில்களில் பயணித்தார்.
பரங்கிமலையில் இருந்து வேளச்சேரி வரையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பயணித்து மீண்டும் மறுமார்கத்தில் இருந்து வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையம் சென்றார்.
பறக்கும் ரயில்களில் பயணம் செய்தவாறு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது,
திமுக ஆட்சிக்கு பிறகு வேளச்சேரி பரங்கிமலை இடையே பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நிலத்தை கையெடுத்தாமல் அதிமுக ஆட்சியில் அப்படியே விட்டுவிட்டார்கள்,
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் தாமதமாக இயக்கப்பட்டத்திற்கு அதிமுக ஆட்சி தான் காரணம் எனவும்
அவர்கள் முறையாக நிலத்தை கையகப்படுத்தி ரயில்வே துறையிடம் ஒப்படைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
தற்போது திமுக ஆட்சியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வந்து பார்த்த போது ரயில் நிலையங்களில் குப்பைகளை சுத்தம் செய்யவே இல்லை,
தேர்தலை மனதில் வைத்து இந்த திட்டத்தை மத்திய அரசு நிறை வேற்றி உள்ளது.
முன்பே திறக்க வேண்டிய திட்டம் இது, காலம் தாழ்த்திவிட்டு தற்போது அவசர கதியில் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே தரப்பில் முறையாக தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ