Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 14 மார்ச் (ஹி.ச.)
திருநெல்வேலி மாநகரத்தின் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ITI பேருந்து நிலையத்தின் அருகில் சென்று கொண்டிருந்த பேட்டை பகுதியைச் சார்ந்த முருகன் (வயது 47) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (23) மற்றும் தென்பத்து பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (23) ஆகிய இரண்டு நபர்கள் தடுத்து நிறுத்தி, மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் முருகனை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, அவரை பயமுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக முருகன் அளித்த புகாரின் அடிப்படையில், பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் மற்றும் சுரேஷ் ஆகிய இரண்டு இளைஞர்களையும் காவல் துறையினர் கைது செய்து, இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM