Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 14 மார்ச் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலத்தை பிளாஸ்டிக் இல்லாத குற்றாலமாக மாற்ற வனத்துறையினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், முதற்கட்டமாக அந்தப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், பிளாஸ்டிக் இல்லாத குற்றாலத்தை மாற்றும் வகையில் இன்றைய தினம் விழிப்புணர்வு மராத்தான் போட்டியானது வனத்துறை சார்பில் நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு மரத்தான் போட்டியை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தொடங்கி வைத்த நிலையில், இதில் ஏராளமானோர் பங்கேற்று பிளாஸ்டிக் இல்லா குற்றாலத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் ஏற்படுத்தினர்.
குறிப்பாக, சுமார் 12 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியானது பழைய குற்றாலம் விலக்கு பகுதியில் தொடங்கி மேலகரம், இலஞ்சி, காசிமேஜர்புரம், குற்றாலம் வரை சுமார் 12 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN