உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இல்லத்தில் ‘பூல் தேய்’ விழா கொண்டாட்டம்
டேராடூன், 14 மார்ச் (ஹி.ச) உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இன்று தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தனது குடும்பத்தினருடன் இணைந்து, பாரம்பரிய நாட்டுப்புற விழாவான ''பூல் தேய்'' (Phool Dei) விழாவைக் கொண்டாடினார். இவ்விழாவின்போது அவரத
'Phool Dei' Festival Celebrated


டேராடூன், 14 மார்ச் (ஹி.ச)

உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இன்று தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தனது குடும்பத்தினருடன் இணைந்து, பாரம்பரிய நாட்டுப்புற விழாவான 'பூல் தேய்' (Phool Dei) விழாவைக் கொண்டாடினார்.

இவ்விழாவின்போது அவரது மனைவி கீதா புஷ்கர் தாமியும் உடனிருந்தார்.

இவ்விழா பாரம்பரிய வழக்கங்களுக்கு ஏற்ப மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடைகளை அணிந்திருந்த சிறுவர் சிறுமியர், முதல்வர் வீட்டின் வாசற்படியில் பூக்களையும் அரிசியையும் வைத்து, அனைவரின் மகிழ்ச்சிக்கா பிரார்த்தனை செய்தனர்.

அவர்கள் பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்களையும் பாடினர். முதலமைச்சர் அந்தச் சிறுவர் சிறுமியரை வரவேற்று, அவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கூறியதாவது,

'பூல் தேய்' விழா, மாநிலத்தின் செழுமையான நாட்டுப்புறப் பண்பாடு, மரபுகள் மற்றும் இயற்கையின் மீதான ஆழ்ந்த மரியாதையைச் சித்தரிக்கிறது.

இவ்விழா வசந்த காலத்தின் வருகையை அறிவிப்பதோடு இயற்கையின் அழகையும் வாழ்வில் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை குறித்த செய்தியையும் பறைசாற்றுகிறது. இயற்கைக்கு எப்போதும் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை இது மக்களுக்கு நினைவூட்டுகிறது,

உத்தராகண்டின் நாட்டுப்புறப் பண்பாடும் பாரம்பரிய விழாக்களும் மாநிலத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தின் ஒரு அங்கம் ஆகும். அவற்றைப் பாதுகாப்பது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.

இத்தகைய விழாக்கள் எதிர்காலத் தலைமுறையினருக்குக் கடத்தப்படுவதற்கும், மாநிலத்தின் நாட்டுப்புறப் பண்பாடு உயிர்ப்புடன் நிலைத்திருப்பதற்கும் உதவும் வகையில், அவற்றை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்.

இயற்கையின் மீதான நன்றியுணர்வு, வசந்த காலத்தின் வருகை மற்றும் நாட்டுப்புறப் பண்பாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை பறைசாற்றும் 'பூல் தேய்' விழா, மக்கள் தங்கள் வேர்களுடன் பிணைந்திருக்கவும், எதிர்காலத் தலைமுறையினருக்கு இந்த விலைமதிப்பற்ற மரபுகளை அறிமுகப்படுத்தவும் ஊக்கமளிக்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் தாமி தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b