பாஜக அரசு தனது சுயநலத்திற்காக இந்திய விவசாயிகளின் நலன்களை அடகு வைக்கவும் தயங்காது - ராகுல் காந்தி
புதுடெல்லி, 14 மார்ச் (ஹி.ச.) குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் அமெரிக்காவுடனான தற்காலிக வியாபார உடன்படிக்கை பற்றி தான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், பாரதிய ஜனதா கட்சி அரசு நழுவுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறை கூறினா
பாஜக அரசு தனது சுயநலத்திற்காக இந்திய விவசாயிகளின் நலன்களை அடகு வைக்கவும் தயங்காது - ராகுல் காந்தி


புதுடெல்லி, 14 மார்ச் (ஹி.ச.)

குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் அமெரிக்காவுடனான தற்காலிக வியாபார உடன்படிக்கை பற்றி தான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், பாரதிய ஜனதா கட்சி அரசு நழுவுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறை கூறினார்.

மேலும், இந்த அரசு இந்திய விவசாயத்தை அவர்களின் சுயநலத்துக்காக பலியிடுவதாகவும் இன்றுகுற்றம் சாட்டினார்.

மக்களவையில் அவர் கேட்ட முக்கியமான கேள்விகளுக்கு,

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் பகீரத் சௌத்ரி அளித்த பதில்கள் சரியில்லை என்று ராகுல் காந்தி தன்னுடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் உள்ள வர்த்தகம் அல்லாத தடைகளை குறைப்பதற்கு இந்தியா ஒப்புக்கொண்டது, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பொது கொள்முதல் குறித்த இந்தியாவின் திட்டங்களை பாதிக்குமா என்ற கேள்விக்கு கூட அரசு பதில் சொல்லாமல் நழுவியதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இதன் மூலமாக விவசாயிகளிடம் இந்த அரசாங்கம் நடந்து கொள்ளும் விதத்தை அவர் கடுமையாக கண்டித்தார்.

இந்த உடன்படிக்கை விவசாயத் துறைக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் என்று கணித்துள்ள ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

Hindusthan Samachar / JANAKI RAM