தவெக தலைவர் விஜய் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாகவும் ஆபாசமாக பேசிய  திமுக முன்னாள் நிர்வாகி குடியாத்தம் குமரன் மீது இரண்டு பிரிவின் கீழ்  வழக்கு பதிவு
வேலூர், 14 மார்ச் (ஹி.ச.) வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த குடியாத்தம் குமரன் என்பவர் திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்து வந்தார் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் சமூ
குடியாத்தம் குமரன்


வேலூர், 14 மார்ச் (ஹி.ச.)

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த குடியாத்தம் குமரன் என்பவர் திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்து வந்தார்

இவர்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் சமூக

வலைத்தளங்களில் திமுக மற்றும் தமிழக அரசுக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் குறித்து கடுமையாக

விமர்சனங்களை செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு வருகிறார்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தவெக தலைவர் விஜய் குறித்து சமூக வலைத்தளங்களில் பேசிய குடியாத்தம் குமரன் விஜய் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து தவெக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகி சபிதா என்பவரது தலைமையில் கடந்த 9 ம் தேதி குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது குடியாத்தம் குமரன் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு

வருகின்றனர்.

மேலும் குடியாத்தம் குமரன் மீது ஏற்கனவே அதிமுக பாமக உள்ளிட்ட கட்சிகள்

தொடர்ந்து புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam