Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 14 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் நடந்த சிஇ20 கிரையோஜெனிக் எஞ்சின் பரிசோதனையை வெற்றிகரமாகச் செய்து முடித்ததற்காக இஸ்ரோவுக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் ஜிதேந்திர சிங் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு, மகேந்திரகிரியில் இருக்கின்ற இஸ்ரோ உந்துவிசை மையத்தில் (Propulsion Complex), 22 டன் உந்துவிசை உடைய சிஇ20 கிரையோஜெனிக் எஞ்சினின் தரை மட்ட வெப்பப் பரிசோதனையைச் சிறப்பாகச் செய்த இஸ்ரோவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
'நாசில் பாதுகாப்பு முறை' (nozzle protection system) மற்றும் 'பல்வேறு பகுதி தீமூட்டும் கருவி' (multi-element igniter) போன்ற நவீன வசதிகளைக் கொண்ட இந்த வெற்றி, இந்தியாவின் வளர்ந்த கிரையோஜெனிக் உந்துவிசை ஆற்றலை வலுப்படுத்துவதோடு, எல்விஎம்3 திட்டத்தின் நம்பிக்கையை அதிகப்படுத்துவதில் முக்கியமான ஒரு திருப்புமுனையாகும்.
என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM