டெல்லி அந்தேரியா மோத் நேச்சர் பஜாரில் தீ விபத்து - 40 கடைகள் எரிந்து தீக்கிரையானது
புதுடெல்லி, 15 மார்ச் (ஹி.ச.) டெல்லி அந்தேரியா மோத்தில் உள்ள நேச்சர் பஜாரில் இன்று அதிகாலை காலை 7.37 மணிக்குஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 40 கடைகள் எரிந்து தீக்கிரையானது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த டெல்லி தீயணைப்புத் துறையினர்பத்து தீ
இன்று அதிகாலை டெல்லி அந்தேரியா மோத் நேச்சர் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 கடைகள் எரிந்தன


புதுடெல்லி, 15 மார்ச் (ஹி.ச.)

டெல்லி அந்தேரியா மோத்தில் உள்ள நேச்சர் பஜாரில் இன்று அதிகாலை காலை 7.37 மணிக்குஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 40 கடைகள் எரிந்து தீக்கிரையானது.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த டெல்லி தீயணைப்புத் துறையினர்பத்து தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தண்ணீரை பீச்சி அடித்துதீ -யை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனதீயணைப்பு அதிகாரி மன்சி குமார் ஷெகாவத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM