மத்திய அமைச்சர் அமித்ஷா பிரக்ஜோதிஷ்பூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை இன்று திறந்து வைத்தார்
கவுகாத்தி, 15 மார்ச் (ஹி.ச.) அசாம் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கௌஹாத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரக்ஜோதிஷ்பூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை இன்று திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவர் கோலாகாட் மற்றும் தி
கவுகாத்தி பிரக்ஜோதிஷ்பூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா


கவுகாத்தி, 15 மார்ச் (ஹி.ச.)

அசாம் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கௌஹாத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரக்ஜோதிஷ்பூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை இன்று திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து அவர் கோலாகாட் மற்றும் தின்சுகியா புற்றுநோய் சிகிச்சை நிலையங்களையும் திறந்து வைத்தார்.

மேலும், திபு, ஜோர்ஹாட் மற்றும் பர்பேட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் நிறுவப்படவுள்ள நவீன சிறப்பு மருத்துவமனைகளுக்கும் காணொளி காட்சி மூலம் மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

கௌஹாத்தியின் சிக்ஸ்மைல் பகுதியில் உருவாகவுள்ள 'ஸ்வஸ்திய பவன்' மற்றும் அபயபுரி மாவட்ட மருத்துவமனைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து கௌஹாத்தியின் கானாபாரா பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருக்கும் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் 'யுவ சக்தி சமரோஹ்' நிகழ்விலும் அமித் ஷா பங்கேற்கவுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM