Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 15 மார்ச் (ஹி.ச.)
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் தற்போது புதிதாக ஆகுமெண்ட் டெக் 3டி, பிகாம் வித் கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் வித் டேட்டா சயின்ஸ், உள்ளிட்ட பல புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க.கலா தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே கள்ளப்புலியூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 18 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி தாளாளர் விஜயகுமார் தலைமையிலும், கல்லூரி துணைத் தலைவர் விக்னேஷ் மற்றும் கல்லூரி முதல்வர் சரவணன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் க.கலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலையில் தேர்ச்சி பெற்ற 439 மாணவ,மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
பட்டமளிப்பு விழாவிற்கு பிறகு அங்கு செய்தியாளர்களை சந்தித்த துணைவேந்தர் க.கலா, தமிழகத்தின் ஒரே மகளிர் பல்கலைக்கழகமான கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் முழுமையாக பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படுகிறது.
இங்கு 18 பாடப்பிரிவுகள் உள்ளன. அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் ஆய்வு நிறைஞர் பயில வசதி உள்ளது.
இங்கே மகளிர் அனைவரும், அரசின் சலுகைகளுடன் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை பெற முடியும். உயர்கல்வி சதவீதத்தில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.
மாநிலத்தில் உயர்கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது,
என்றார்.
பெண்கள் கல்வி கற்பதன் மூலம் தங்கள் சொந்தக்காலில் நிற்கும் துணிவு பெறுகிறார்கள்.
தாங்கள் விரும்பும்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது என்றும், சிறந்த தொழில் முனைவோர் ஆகவும், தகுதியான பணிகளுக்கு செல்லும் வாய்ப்பும், பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியாளர்களாகவும் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது, என்றார்.
எங்கள் பல்கலைக்கழகத்தில், டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ பாடப்பிரிவுகளின் சேர அதிகம் மாணவிகள் ஆர்வம் காட்டுவதாகவும், தற்போது புதிதாக ஆகுமெண்ட் டெக் 3டி, பிகாம் வித் கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் வித் டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட பல புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்று துணைவேந்தர் கலா தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN