இன்று நடைபெறும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வருடாந்திர விருது வழங்கும் விழா
மும்பை, 15 மார்ச் (ஹி.ச.) சமீபத்தில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை தோற்கடித்து 20 ஓவர் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் விளைவாக, 3-வது முறையாக 20 ஓவர் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை அடைந்தது. இந்நில
இன்று நடைபெறும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வருடாந்திர விருது வழங்கும் விழா


மும்பை, 15 மார்ச் (ஹி.ச.)

சமீபத்தில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை தோற்கடித்து 20 ஓவர் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதன் விளைவாக, 3-வது முறையாக 20 ஓவர் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை அடைந்தது.

இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு இன்று பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் வருடாந்திர விருது வழங்கும் விழா இன்று நடக்கவுள்ளது. இந்த விழாவில், 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

அதேபோன்று, உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணி, 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோருக்கு கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

முன்னாள் விளையாட்டு வீரர்கள் ரோஜர் பின்னி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கும் விருது அளிக்கப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM