வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று பெலிஜியம் பயணம்
புதுடெல்லி, 15 மார்ச் (ஹி.ச) வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (மார்ச் 15) பிரஸ்ஸல்ஸ் நகருக்குப் பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின்
External Affairs Minister S. Jaishankar travels to Belgium


புதுடெல்லி, 15 மார்ச் (ஹி.ச)

வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று

(மார்ச் 15) பிரஸ்ஸல்ஸ் நகருக்குப் பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன், வெளியுறவு விவகாரங்களுக்கான கவுன்சில் கூட்டத்தில் கலந்துரையாடுவதற்காக, காஜா கல்லாஸின் அழைப்பின் பேரில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த 2 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின் போது, அமைச்சர் ஜெய்சங்கர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். மேலும் பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தனது வெளியுறவுத் துறை சகாக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு நடைபெற்ற சிறிது காலத்திலேயே மேற்கொள்ளப்படும் வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்தப் பயணம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b