பாஸ்டாக் விலை உயர்வு - ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்
புதுடெல்லி, 15 மார்ச் (ஹி.ச.) தனியார் வாகனங்களுக்கான வருடாந்திர பாஸ்டாக் பாஸின் விலையை ரூ.3000ல் இருந்து ரூ.3075 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியது. தமிழ் நாட்டில் உள்ள 66 சுங்கச்ச்சாவடிகளின் கட்டணத்தையும் 5-7% உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
FASTag Price Hike – Effective from April 1st


புதுடெல்லி, 15 மார்ச் (ஹி.ச.)

தனியார் வாகனங்களுக்கான வருடாந்திர பாஸ்டாக் பாஸின் விலையை ரூ.3000ல் இருந்து ரூ.3075 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியது.

தமிழ் நாட்டில் உள்ள 66 சுங்கச்ச்சாவடிகளின் கட்டணத்தையும் 5-7% உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பாஸ்டாக் வருடாந்திர பாஸ் (Annual Pass) விலை 2.5 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.

இதுவரை ரூ.3,000-க்கு வழங்கப்பட்டு வந்த இந்த பாஸ், இனி ரூ.75 கூடுதலாகச் சேர்த்து ரூ.3,075-க்கு விற்பனை செய்யப்படும். தமிழ் நாட்டில் உள்ள 66 சுங்கச்ச்சாவடிகளின் கட்டணத்தையும் 5-7% உயர்த்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்த பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, டோல் கட்டணங்களின் வருடாந்திர திருத்தத்திற்கு ஏற்ப பாஸ் விலையும் மாறும் என்று அறிவித்திருந்தது.

இந்த விலை மாற்றத்தால் நாடு முழுவதும் சுமார் 52 லட்சம் வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, இந்த வசதி இந்தியாவிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது இந்த வருடாந்திர பாஸ் செல்லாது என்பதால், அங்குள்ள டோல் பிளாசாக்களில் வழக்கமான பாஸ்டாக் கணக்கில் உள்ள இருப்புத் தொகையிலிருந்தே கட்டணம் கழிக்கப்படும்.

இந்த பாஸைப் பெறுவதற்கு வாகன ஓட்டிகள் 'ராஜ்மார்க் யாத்ரா' (Rajmarg Yatra) மொபைல் செயலி அல்லது NHAI மற்றும் MoRTH ஆகிய அரசு அமைப்புகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை நாடலாம்.

ஆன்லைனில் இதற்கான கட்டணத்தைச் செலுத்திய இரண்டு மணி நேரத்திற்குள் பாஸ் ஆக்டிவேட் செய்யப்பட்டு, பயனரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

Hindusthan Samachar / vidya.b