Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 15 மார்ச் (ஹி.ச.)
வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, சென்னை சுற்றுவட்டாரப் பகுதி உணவுகளில் உணவுப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது.
இதனால், சமையல் எரிவாயு உருளையைக் கையிருப்பு வைத்திருக்கும் பெரிய அளவிலான சில உணவகங்களே வழக்கம்போல அனைத்து வகை உணவுகளையும் தயாரித்து வழங்கி வருகின்றன.
ஆனால், பல நடுத்தர உணவகங்கள் வழக்கமாக தயாரிக்கும் உணவு வகைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளன.
சேலம் மாநகர் பேர்லன்ஸ் முருகன் கோவில் அருகில் பிரபல தனியார் சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் 100% விலையேற்றம் அடைந்துள்ளதால் உணவுகளுக்கு 25 ரூபாயும் தேநீர், காபி உள்ளிட்ட பாணங்களுக்கு 10 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் பில்லில் எக்ஸ்ட்ரா ஐட்டம் என்ற பெயரில் இந்த கூடுதல் விலை வசூலிக்கப்படுகிறது.
கடந்த 12ஆம் தேதி முதல் இந்த விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு சரியாகும் வரை தற்காலிக விலை ஏற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam