புழுதி பறக்க நடந்த கிடா முட்டு சண்டை - சண்டை பிரியர்கள் மகிழ்ச்சி
சிவகங்கை, 15 மார்ச் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் மந்தையம்மன் கோயில் வருடாபிஷேகத்த முன்னிட்டு இன்று 5வது ஆண்டாக பிரம்மாண்டமான ஆட்டு கிடா சண்டை நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தந்து ச
கிடா சண்டை


சிவகங்கை, 15 மார்ச் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் மந்தையம்மன் கோயில்

வருடாபிஷேகத்த முன்னிட்டு இன்று 5வது ஆண்டாக பிரம்மாண்டமான ஆட்டு கிடா சண்டை

நடந்தது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தந்து சண்டையை ரசித்தனர். தென்மாவட்டங்களில் ஜல்லிகட்டிற்கு அடுத்தபடியாக ஆட்டு கிடா

சண்டை நடைபெறுவது வழக்கம்.

5வது ஆண்டாக பொட்டப்பாளையத்தில் ஆட்டு கிடா சண்டை காலை 9 மணிக்கு தொடங்கியது..

மதுரை, தேனி, திண்டுக்கல், பொள்ளாச்சி,

சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 75 ஜோடி ஆட்டு கிடாக்கள் போட்டியில் மோதின.

இதில் கிடா அதிக (60 முறை) முறை முட்டிய கிடாய்க்கு 10 கிலோ எடை உள்ள பித்தளை அண்டாவும், தோல்வியடைந்த கிடாக்களுக்கு 5 கிலோ எடை கொண்ட பித்தளை அண்டாவும் பரிசாக வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற கிடாக்களுக்கு

பரிசுகள் வழங்கப்பட்டன. மோதலுக்கு நேரம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

5 -வது ஆண்டாக நடந்த சண்டையை கண்டு ரசிக்க ஏராளமான பார்வையாளர்கள்

திரண்டிருந்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam