கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி ரத்துசெய்யப்பட்ட குரூப் 2 ஏ மற்றும் குரூப் 2 தேர்வுகள் இன்று நடைபெறுகிறது
சென்னை, 15 மார்ச் (ஹி.ச) தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் காலியாக உள்ள சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி உள்ளிட்ட 828 அரசுப்பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ-வின் முதல் நிலைத் தேர்வுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்றது. 4
Group 2


சென்னை, 15 மார்ச் (ஹி.ச)

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் காலியாக உள்ள சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி உள்ளிட்ட 828 அரசுப்பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ-வின் முதல் நிலைத் தேர்வுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்றது.

4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இந்த தேர்வில், 10 ஆயிரத்து 583 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 மற்றும் குரூப்-2A முதன்மைத் தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றன.

காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை குரூப்-2A பொது அறிவு மற்றும் பகுத்தறிவு தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வர்களுக்கான தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

குளறுபடிகள் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குரூப் 2a, குரூப் 2 தேர்வுகள் இன்று நடைபெறுகிறது.

இன்று காலை நடைபெறும் குரூப் 2a முதன்மை தேர்வினை 9223 பேர் எழுதுகின்றனர். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 38 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

காலை 9.30. மணிக்கு குரூப் 2 ஏ முதன்மை தேர்வுகள் தொடங்கும். காலை 9 மணி வரை மட்டுமே மையங்களுக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இதையடுத்து இன்று பிற்பகல் குரூப் 2 ஏ மற்றும் குரூப் 2 தேர்வர்களுக்கு தமிழ் தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி குரூப் 2 ஏ மற்றும் குரூப் 2 தேர்வுகள் காலை மற்றும் பிற்பகல் நடைபெற இருந்த நிலையில் குளறுபடிகள் காரணமாக அன்று தேர்வு ரத்து செய்யப்பட்டது.

அதன் பிறகு அந்த தேர்வு தற்போது நடத்தப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ