Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 மார்ச் (ஹி.ச.ஸ்)
சென்னை அரும்பாக்கத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் சிலிண்டர் விலை ஏற்றம் உள்ளிட்டவைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய தேமுதிக பொருளாளர் சுதீஷ்,
ஆர்ப்பாட்டம் நடத்தினால் பொதுவாக கட்சி நிர்வாகிகள் தான் பங்கேற்பார்கள்.
இந்த ஆர்பாட்டத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
25 லட்சம் ஹோட்டல் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு கூட பலர் வர யோசிக்கிறார்கள் காரணம் சிலிண்டர் தட்டுப்பாடு ஹோட்டல்களில் உணவு இல்லை.
4 நாட்கள் முன்பு இப்தார் நோன்பு நடத்தப்பட்டது அன்று சிலிண்டர் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டோம் பின்னர் விறகு அடுப்பில் வைத்து தான் கஞ்சியை செய்தோம்.
நிறைய மண்டபங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
உலகத்தில் உள்ள அனைவரும் எனக்கு நண்பர்கள் என பொய் தம்பட்டம் மோடி அடித்து கொள்கிறார்.
கச்சா எண்ணெய் 6 மாதத்திற்கு இருப்பு வைத்து இருக்க வேண்டும் ஆனால் இருப்பு இல்லை.
தே.மு.தி.க.வருவதற்கு முன்பே தி.மு.க.200-தொகுதியில் வெற்றி பெறும் தற்போது தே.மு.தி.க.வந்த பின்னர் கூடுதலாக வெற்றி பெறும்.
அதிமுக இந்த தேர்தலில்
வாஸ் அவுட் என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,
ஒரு முக்கியமான நிகழ்வு
மார் தட்டி மோடி சொன்னார் நாங்கள் ஆட்சிக்கு வந்ததுடன் இந்தியாவில் தாய்மார்கள் விறகு அடுப்பில் சமைக்க தேவையில்லை என்று சொன்னார் ஆனால் இப்போது சிலிண்டர் இல்லை.
இதுவரை அணி சேராத நாடாக தான் இந்திய இருந்தது.
அதானிக்காக அமெரிக்க மிரட்டுகிறார்கள் என்று அமெரிக்கா சொல்வதை தான் மோடி செய்கிறார்.
இந்தியா யாரிடம் சிலிண்டர் பெற வேண்டும் என்று அமெரிக்க சொல்கிறது.
அவர் நண்பர்களை காப்பாற்ற இந்தியாவை அடிமையாக்குகிறார் மோடி.
நீங்கள் தொலைக்காட்சியில் வந்தாலே மக்களுக்கு பீதியாகிறது.
மின்சார தட்டுப்பாடு, நீர் தட்டுபாடு இருந்தது. இப்போது ஹோட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் தான் உணவு கிடைக்கும் என்று போர்டு வைக்கிறார்கள்.
மோடிக்கு இந்தியா பற்றியும் கவலையில்லை தமிழ்நாடு பற்றியும் கவலையில்லை, உங்கள் நண்பர் பற்றி தான் கவலை.
என்.டி.ஏ.கூட்டணியில் இருக்கும் பா.ம.க.தலைவர் அன்புமணி தன் அப்பாவை கொலை செய்ய முயற்சி செய்தார் என்று ராமதாஸ் அவர்களே சொல்கிறார்
வாங்கின காசுக்கு வேறு எங்கயோ கூவுகிறார்.
முதலில் உங்கள் அப்பா காலில் விழுந்து மன்னிப்பு கேள் புண்ணியம் கிடைக்கும்.
என்று பேசினார் தயாநிதி மாறன் .
Hindusthan Samachar / Durai.J