தேமுதிக வருகையால் கூட்டணி கட்சியினர் இடையே எந்த அதிருப்தியும் இல்லை - பிரேமலதா விஜயகாந்த்
காஞ்சிபுரம், 15 மார்ச் (ஹி.ச.) தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இன்று காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் ஆலயம், உலகளந்த பெருமாள் ஆலயம், மற்றும் திருப்பாற்கடல் உள்ளிட்ட ஆலயங்களில் சாமி
Premalatha Vijayakant


காஞ்சிபுரம், 15 மார்ச் (ஹி.ச.)

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இன்று காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் ஆலயம், உலகளந்த பெருமாள் ஆலயம், மற்றும் திருப்பாற்கடல் உள்ளிட்ட ஆலயங்களில் சாமி தரிசனம் செய்தார்.

உலகளந்த பெருமாள் கோவில் சாமி தரிசனம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமாதா விஜயகாந்த் கூறியதாவது,

இன்று தேர்தல் தேதி அறிவிக்க உள்ளனர். திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று 200 தொகுதிக்கு மேல் வெல்லும். திமுக கூட்டணியில் தேமுதிக வருகையால் கூட்டணி கட்சியினர் இடையே எந்த அதிருப்தியும் இல்லை, அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளோம்.

இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி தொகுதி முடிவு செய்யப்பட்டு தேமுதிக குழு யாரை போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை செய்யும். கடந்த முறை விட இந்த முறை அதிக தொகுதியில் போட்டியிடுவோம்.

தேமுதிகவில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் விரும்புகிறார்கள், எண்ணிக்கை மட்டும் தொகுதி முடிவு செய்த பிறகு எந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்பது முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Hindusthan Samachar / vidya.b