பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை, 15 மார்ச் (ஹி.ச.) சமையல் எரிவாயு சிலிண்டர் விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் போராட்டங்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இ
பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு


சென்னை, 15 மார்ச் (ஹி.ச.)

சமையல் எரிவாயு சிலிண்டர் விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் போராட்டங்களில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

வெளியுறவுக் கொள்கையிலும் பெயிலியர் மாடல் எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தொலைநோக்கு இல்லை,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை.

இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b