Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 மார்ச் (ஹி.ச.)
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கான்ஷி ராமின் பிறந்தநாளையொட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஏழை, தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அவர் மேற்கொண்ட அயராத போராட்டம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாகத் திகழ்வதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இது தொடர்பாகஎக்ஸ் தளத்தில் அவர்வெளியிட்ட பதிவில்,
பகுஜன் சமூகத்தின் நாயகரும், பெரிதும் மதிக்கப்படுபவருமான 'மான்யவர்' கான்ஷி ராம் ஜியின் பிறந்தநாளான இன்று, நான் எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
ஏழை, தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அவர் மேற்கொண்ட அயராத போராட்டமும், அதற்காக அவர் அர்ப்பணித்துக்கொண்ட விதமும் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாகத் திகழ்கின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டமே தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான பலம் என்று அவர் நம்பினார்.
ஆனால், அதே அரசியலமைப்புச் சட்டம் இன்று ஆபத்தான நிலையில் உள்ளது; பாபா சாகேப் (அம்பேத்கர்) உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி ஏற்றுக்கொண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்களே, இன்று அந்தச் சட்டத்தை பலவீனப்படுத்துவதில் குறியாக உள்ளனர்.
பகுஜன் சமூகத்தினரின் பங்களிப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதிலும் காங்கிரஸ் கட்சி எப்போதும் உறுதியாக நின்றுள்ளது.
அது கடந்த காலமானாலும் சரி, நிகழ்காலமானாலும் சரி, அல்லது எதிர்காலமானாலும் சரி.
என்று அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM