வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் கொலை - செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
தூத்துக்குடி, 15 மார்ச் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப
சாலை மறியல்


தூத்துக்குடி, 15 மார்ச் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்த நிலையில் திடீரென போராட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் போலீஸா இருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு சாலையோரம் ஒதுக்கப்பட்டு இருந்த இடத்தில் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam