திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் ஓரமாக மர்மமாக முறையில் இறந்து கடந்த டிரைவர்
மதுரை, 15 மார்ச் (ஹி.ச.) திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டின் ஒரமாக ரயில்வே தண்டவாளத்தின் அருகே 35 வயது ஆண் பிரேதம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் சித்திரகலா மற்றும் போலீசார் விரைந்து வந்து பா
h


மதுரை, 15 மார்ச் (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டின் ஒரமாக ரயில்வே தண்டவாளத்தின் அருகே 35 வயது ஆண் பிரேதம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் சித்திரகலா மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்த்து போட்டோ எடுத்து வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்பிய போது இவர் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு எஸ் மேட்டு தெருவை சேர்ந்த ஐயப்பன் மகன் கண்ணன் வயது 35 இவருக்கு இரண்டு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இவரது மனைவி பெயர் சித்ரா என்பது தெரியவந்தது. இவருக்கு கால் கைகளில் சிறு சிராய்ப்பு காயம் மட்டுமே உள்ளது.

இவர்இன்று காலை 10 மணி அளவில் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்று விட்டு வருவதாக கூறி தனது மனைவி சித்ரா குழந்தைகளை திருப்பரங்குன்றம் ஒரு விசேஷ வீட்டுக்கு அனுப்பிவிட்டு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இவர் எப்படி இறந்தார் ரயிலில் அடிபட்டாரா அல்லது வாகன மோதி இறந்தாரா என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Hindusthan Samachar / Durai.J