பழனியில் துணை ராணுவப் படையினர் வாகன சோதனை
திண்டுக்கல், 15 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் சென்று தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி முடித்துள்ளனர். இந்தச் சூழல
தேர்தல் நடத்தை விதிகள் இன்று மாலை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், பழனியில் வாகன சோதனை


திண்டுக்கல், 15 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் சென்று தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி முடித்துள்ளனர்.

இந்தச் சூழலில் இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

டெல்லியில் இன்று மாலை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவிக்கின்றனர்.

இதில் தமிழகம், கேரளம், புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட வாய்ப்பு நிலவுகிறது.

இந்த அறிவிப்பு வெளியான பின்னர் தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். அதை பிரதிபலிக்கும் வகையில் புதுச்சேரியின் எல்லையோர பகுதிகள் மற்றும் சில முக்கிய சந்திப்புகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று மாலை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

துணை ராணுவப் படையினர் உடன் இணைந்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சோதனையில் வெடிமருந்து, மது, போதை பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் கடத்தி செல்கின்றனரா என கவனித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b