Enter your Email Address to subscribe to our newsletters

ஜெய்ப்பூர், 15 மார்ச் (ஹி.ச.)
ஒவ்வொரு வருடமும் மார்ச் 30-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உருவான தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், ராஜஸ்தான் தின விழாக்களின் ஒரு அங்கமாக, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா இன்று ஜெய்ப்பூரில் 'விக்ஸித் ராஜஸ்தான் ஓட்டம்-2026' நிகழ்ச்சியை பச்சைக்கொடி காட்டித் துவக்கி வைத்தார்.
இந்த வருட கொண்டாட்டத்திற்கு முன்னதாக, மாநில அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்ச்சியில் பேசிய சர்மா,
கடந்த பத்து வருடங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து மக்களிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வை எடுத்துக்காட்டினார்.
நிகழ்ச்சி நிரலின்படி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் ஒரு பொருட்காட்சி ஆகியவை மார்ச் 16 அன்று ஏற்பாடு செய்யப்படும்.
அதே சமயத்தில் மார்ச் 17-ஆம் தேதி 'ராஜஸ்தான் யுவ சக்தி திவாஸ்' (இளைஞர் சக்தி தினம்) என்று கொண்டாடப்படும்.
மார்ச் 18-ஆம் தேதிக்காக திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகளில், கோவிந்த் தேவ் ஜி கோவிலில் நடைபெறும் 'மகா ஆர்த்தி' உட்பட அனைத்து அரசு கோவில்களிலும் நடைபெறும் 'ஆர்த்தி' வழிபாடுகள் அடங்கும்.
அந்நாளில் முதலீட்டு யோசனைகளுக்கான அடிக்கல் நாட்டு விழாக்கள், தொழிலதிபர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்புக்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
இந்த கொண்டாட்டங்கள் மார்ச் 19 அன்று முடிவடையும். அன்று 207 அரசுப் பேருந்துகள் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்படும்.
மேலும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM