குடிநீரில் உப்பு தன்மை அதிகம் உள்ளதால் 50க்கும் மேற்பட்டோருக்கு கிட்னி  பாதிப்பு - கணக்கெடுக்கும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்
கள்ளக்குறிச்சி, 15 மார்ச் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள கானாங்காடு கிராமத்தில் குடிநீரில் அதிக அளவு உப்பு தன்மை இருப்பதால் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில் வருவாய்த்துறை அத
குடிநீரில் உப்பு


கள்ளக்குறிச்சி, 15 மார்ச் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள கானாங்காடு கிராமத்தில்

குடிநீரில் அதிக அளவு உப்பு தன்மை இருப்பதால் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு

கிட்னி பாதிப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள்

நேரில் விசாரணை செய்து வருகின்றனர் .

கானாங்காடு கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில்

பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குடிநீரில் உப்பு தன்மை இருப்பதால் அதை

பயன்படுத்தும் பொதுமக்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது

இதனால் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள்

புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்

வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் வீடு வீடாக

சென்று நேரில் விசாரணை செய்து வருகிறார்.

மேலும் வீட்டில் யார் யாருக்கு குடி

தண்ணீரால் கிட்னி பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து கேட்டறிந்து விவரங்களை

சேகரித்து வருகிறார்.

Hindusthan Samachar / GOKILA arumugam