இன்று (மார்ச் 15) உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
சென்னை, 15 மார்ச் (ஹி.ச.) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15-ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நுகர்வோர்களாகிய நமது உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உலகளவில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். அமெ
இன்று (மார்ச் 15) உலக நுகர்வோர் உரிமைகள் தினம்


சென்னை, 15 மார்ச் (ஹி.ச.)

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15-ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

நுகர்வோர்களாகிய நமது உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உலகளவில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி, 1962-ஆம் ஆண்டு மார்ச் 15-ல் நுகர்வோர் உரிமைகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், 1983-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

2026-ஆம் ஆண்டிற்கான உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தின் கருப்பொருள்: பாதுகாப்பான பொருட்கள், தன்னம்பிக்கை கொண்ட நுகர்வோர் என்பதாகும்.

அடிப்படை நுகர்வோர் உரிமைகள்:

ஒரு நுகர்வோராக நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஆறு உரிமைகள்.

பாதுகாப்பு உரிமை - உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களிலிருந்து பாதுகாப்பு பெறுதல்.

தகவல் பெறும் உரிமை: பொருட்களின் தரம், அளவு, தூய்மை மற்றும் விலை குறித்து சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ளுதல்.

தேர்ந்தெடுக்கும் உரிமை - நியாயமான விலையில் பல்வேறு தரமான பொருட்களிலிருந்து நமக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்தல்.

கருத்துத் தெரிவிக்கும் உரிமை - நுகர்வோர் நலன் சார்ந்த முடிவுகளில் நமது கருத்துக்களைப் பதிவு செய்தல்.

குறைதீர்க்கும் உரிமை - தவறான வணிக நடைமுறைகள் அல்லது சுரண்டல்களுக்கு எதிராக நீதி கோருதல்.

கல்வி பெறும் உரிமை - நுகர்வோர் உரிமைகள் குறித்த போதிய அறிவைப் பெறுதல்.

நுகர்வோர் கவனத்திற்கு:

எந்தப் பொருளை வாங்கினாலும் அதற்கான முறையான ரசீதை கேட்டுப் பெற வேண்டும்.

பொருட்களில் உள்ள ஐஎஸ்ஐ முத்திரை, அக்மார்க் போன்ற தரச் சான்றிதழ்களைச் சரிபார்க்க வேண்டும்.

பாதிக்கப்படும் பட்சத்தில், மாவட்ட அல்லது மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையங்களை அணுகலாம்.

விழிப்புணர்வுள்ள நுகர்வோரே நாட்டின் பலம்!

Hindusthan Samachar / JANAKI RAM