எனக்கு நயன்தாரா வேணும் - முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீண்டும் சர்ச்சை பேச்சு!
சென்னை, 17 மார்ச் (ஹி.ச.) சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கடலூரில் பாமக தலைவர் அன்புமணி, தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என கூட்டணி க
C


சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)

சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கடலூரில் பாமக தலைவர் அன்புமணி, தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம் பெரும் தொண்டர்கள் பலத்தோடு நடந்தது.

இந்நிலையில்,விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி சண்முகம்,

ஆட்சி முடியும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உங்க கனவை சொல்லுங்க என்று ஒரு திட்டம் கொண்டு வருகிறார்.

எனக்கு நயன்தாரா வேணும்... நயன்தாரா கல்யாணம் பண்ணனும் அதான் என் கனவு. உன்னால நிறைவேற்ற முடியுமா? என்று அந்தத் திட்டத்தை கிண்டல் செய்வதாக நினைத்து பெண்களை அவமானப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார் சண்முகம்.

இதற்கு சமூக தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

பெண்கள் பாதுகாப்பு பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்பாட்டத்தில் இப்படி பேசி ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விட்டார் என அதிமுகவினரே சிவி சண்முகம் மீது கோபத்தில் உள்ளனர்.

Hindusthan Samachar / Durai.J