விமானங்களில் 60% இருக்கைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்ககூடாது - மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி, 18 மார்ச் (ஹி.ச.) விமானங்களில் ஏறக்குறைய 60 சதவீத இருக்கைகளுக்கு அதிகப்படியான கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் சில முக்கியமான விதிமுறைகளை இன்று அறிவித்துள்ளது. உலக அளவில் உள்நாட்டு விமானப் பயணிகளை
விமானங்களில் 60% இருக்கைகளுக்கு அதிக கட்டணம் வாங்கக் கூடாது - மத்திய அரசு உத்தரவு


புதுடெல்லி, 18 மார்ச் (ஹி.ச.)

விமானங்களில் ஏறக்குறைய 60 சதவீத இருக்கைகளுக்கு அதிகப்படியான கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் சில முக்கியமான விதிமுறைகளை இன்று அறிவித்துள்ளது.

உலக அளவில் உள்நாட்டு விமானப் பயணிகளை கவனிப்பதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் ஒரு நாளைக்கு ஏறத்தாழ 5 லட்சம் பயணாளிகளை கையாளுகின்றன.

விமானங்களில் பயணம் செய்யும்போது ஜன்னல் இருக்கைகள், முன்புற இருக்கைகள் போன்றவற்றை தேர்ந்தெடுப்பதற்கு விமான நிறுவனங்கள் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன.

இந்நிலையில், எல்லா விமானங்களிலும் சுமார் 60 சதவீத இருக்கைகளை தேர்ந்தெடுப்பதற்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கட்டளையிட்டுள்ளது.

மேலும், ஒரே நேரத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்கின்ற பயணிகளுக்கு முக்கியமான அடிப்படையில் ஒரே இடத்தில் இருக்கைகளை ஒதுக்குவதற்கு விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்,விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் இசைக்கருவிகளை பத்திரமாக எடுத்துச் செல்வதற்கு ஏற்ற வசதிகளை செய்து தர வேண்டும். செல்லப் பிராணிகளை விமானத்தில் கொண்டு செல்வதற்கான தெளிவான விதிமுறைகளை நிறுவனங்கள் வெளியிட வேண்டும்.

விமான நிறுவனங்களின் இணையதளங்கள், மொபைல் செயலிகள், முன்பதிவு செய்யும் பக்கங்கள் மற்றும் விமான நிலைய கவுண்டர்களில் பயணிகள் உரிமைகளை அந்தந்த வட்டார மொழிகளில் தெளிவாக தெரியப்படுத்த வேண்டும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM