இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் கேஎல் ராகுல்
புதுடெல்லி, 18 மார்ச் (ஹி.ச.) 10 குழுக்கள் பங்குபெறும் 19-வது ஐ.பி.எல் போட்டித் தொடர் வருகிற 28-ம் தேதி முதல் மே மாதம் 31-ம் தேதி வரை இந்தியாவின் பல நகரங்களில் நடக்கவுள்ளது. இதற்காக, 10 குழுக்களின் ஆட்டக்காரர்களும், இப்போதே பயிற்சியை ஆரம்பித்துவி
இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் கேஎல் ராகுல்


புதுடெல்லி, 18 மார்ச் (ஹி.ச.)

10 குழுக்கள் பங்குபெறும் 19-வது ஐ.பி.எல் போட்டித் தொடர் வருகிற 28-ம் தேதி முதல் மே மாதம் 31-ம் தேதி வரை இந்தியாவின் பல நகரங்களில் நடக்கவுள்ளது.

இதற்காக, 10 குழுக்களின் ஆட்டக்காரர்களும், இப்போதே பயிற்சியை ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் முக்கியமான ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க இருப்பதாக செய்தி வந்துள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டு சீசனில் ராகுல் பெரும்பாலும் 4-வது இடத்தில் விளையாடினார்.

ஆனால், அணியின் மற்ற தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடாததால், இந்த முறை அவரை மறுபடியும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்க டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

2025-ம் ஆண்டு சீசனில் ராகுல் டெல்லி அணிக்காக 13 ஆட்டங்களில் விளையாடி 539 ரன்கள் எடுத்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM