Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 மார்ச் (ஹி.ச.)
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஆய்வு குழுவின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடர் வரை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக இன்று மக்களவையில் தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.
2024 டிசம்பர் மாதம் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் 39 பேர் கொண்ட ஆய்வுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
குழுவின் காலம் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது.
குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் இந்த மசோதா அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்துக்கு வரம்பில்லா அதிகாரம் வழங்குவது ஆபத்து என்று அவர்கள் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam