Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 18 மார்ச் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் சத்துவாச்சாரி சிஎம்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சையத் ஹமீம்.
கார் பழுது பார்க்கும் பணியைச் செய்து வரும் இவர் இன்று (18.03.2026) கார் மெக்கானிக் ஷெட்டுக்கு வந்து காரை பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று கார் முன்பக்க இன்ஜினிலிருந்து புகை வர துவங்கி எரிய ஆரம்பித்துள்ளது.
அதைக் கண்ட கார் ஷெட் உரிமையாளர் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளார் உடனே இது தொடர்பாக வேலூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டன தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பாகவே உள்ளே நிறுத்தி வைத்திருந்த மூன்று கார்களிலும் தீ பரவி முற்றிலுமாக எரியத் தொடங்கின.
மேலும் தீயணைப்புத் துறையினர் வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர் ஆனால் உள்ளே ஆயில் உள்ளிட்ட எண்ணெய் பொருட்கள் இருந்ததால் தீ அதிக அளவில் பரவ தொடங்கியது.
தண்ணீரால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் மெக்கானிக்கல் போம் என்று சொல்லக்கூடிய நுரை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்க பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b