Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 18 மார்ச் (ஹி.ச.)
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று (மார்ச் 18, 2026) லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஜல் ஜீவன் இயக்கத்தின் (JJM) கீழ் மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான புதிய முன்னெடுப்பை அறிவித்தார்.
இந்த திட்டப் பணிகள் முடிவுக்கு வந்த பிறகு, அடுத்த பத்தாண்டுகளில் கட்டமைப்பு வசதிகளின் பராமரிப்புப் பொறுப்பை ஒப்பந்ததாரர்கள் ஏற்றுக்கொள்வது புதிய ஒப்பந்தம் உறுதி செய்கிறது.
இதன் மூலம் நீண்டகால சேவைக்கு உத்தரவாதம் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் உத்தரப் பிரதேச அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதிகளில் சமீபத்திய அகால மரணங்கள் ‘என்செபலைடிஸ்’ (மூளை காய்ச்சல்) நோயால் ஏற்பட்டவை என்றும், திறந்தவெளியில் மலம் கழித்தல் மற்றும் அசுத்தமான குடிநீர் இந்நோய் பரவ காரணமாக இருந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
முதலமைச்சர், தூய்மை இந்தியா இயக்கம் கீழ் ‘ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை’ திட்டமும், ஜல் ஜீவன் இயக்கம் கீழ் ‘ஒவ்வொரு வீட்டிலும் குழாய் நீர்’ திட்டமும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி செயல்படுத்தப்பட்டுள்ளதாக, இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM