Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 19 மார்ச்
(ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் கலீப் நகர் 1ஆம் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் இவர் புதுக்கோட்டையில் சலூன் கடை வைத்துள்ளார் இவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவரது உதவிக்கு அவரது மனைவியும் மருத்துவமனையில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் அவரின் பிள்ளைகள் அருகில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று அங்கே தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரிய வந்து உடனடியாக அவர்களுக்கு தகவல் அளித்ததின் பேரில் வீட்டு உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து 30 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்க பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட தகவல் படி தங்களது வீட்டில் இருந்து 30 போன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக சரவணன் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைப்பதற்காக கொண்டு வந்த இரும்பு ராடையும் உடைத்த கேட்டையும் சரவணன் வீட்டின் அடுப்பறையில் வைத்து விட்டு சென்றுள்ளனர்
Hindusthan Samachar / Durai.J