திண்டுக்கல் அருகே ஆட்டு வியாபாரியிடம் ரூ.1.81 லட்சம் பறிமுதல்
திண்டுக்கல், 19 மார்ச் (ஹி.ச) திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டக்காமன்பட்டி பிரிவில், வருவாய்துறை அலுவலர் உமாதேவி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனி மாவட்டம் போடி ப
Code of Conduct


திண்டுக்கல், 19 மார்ச் (ஹி.ச)

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டக்காமன்பட்டி பிரிவில், வருவாய்துறை அலுவலர் உமாதேவி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தேனி மாவட்டம் போடி பகுதியில் இருந்து வத்தலகுண்டு வழியாக விழுப்புரம் ஆட்டுச் சந்தைக்கு ஆடுகள் வாங்கச் சென்ற வியாபாரிகள் மீது அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வாங்கச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது அவர்களிடம் இருந்த ரூ.1,81,100 ரொக்கப்பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என தெரியவந்ததால், தேர்தல் விதிமுறைகளின்படி அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் பின்னர் நிலக்கோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் பாலகுருநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் காலத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளைத் தடுக்க இதுபோன்ற சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN