தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு
புதுடெல்லி, 19 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் அம
தேர்தல் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை - இந்திய  தேர்தல் ஆணையம் உத்தரவு


புதுடெல்லி, 19 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் அமலில் உள்ளன. இதனை தொடர்ந்து, வாக்குப்பதிவுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் நாளில் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தவறாமல் ஓட்டுப்போட வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தும் விதத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் 9-ந்தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b