பழனியில் சுற்றி வரும் ஒற்றை யானையால் சிக்கல்!
திண்டுக்கல், 19 மார்ச் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள தேக்கம் தோட்டம் அருகே இந்த ஒற்றை யானை சாலையில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. திடீரென சாலையில் யானை தோன்றியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்
Elephant


திண்டுக்கல், 19 மார்ச் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம்

பழனி – கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள தேக்கம் தோட்டம் அருகே இந்த ஒற்றை யானை சாலையில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. திடீரென சாலையில் யானை தோன்றியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சில நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.

ஆனால் யானை அடிக்கடி சாலைக்கு திரும்பி வருவதால் வனத்துறையினருக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யானையை நிரந்தரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக பள்ளி தேர்வுகள் முடிவடைந்ததும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த மலைச்சாலையை பயன்படுத்துவார்கள் என்பதால், முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

வனவிலங்குகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் எந்தவித விபத்துகளும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN