Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, மார்ச் 19 (ஹி.ச)
உகாதிப் பண்டிகை ஒரு புதிய விடியலுக்குக் காரணமாக அமையட்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
எனது தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் திராவிடச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய உகாதி நல்வாழ்த்துகள்.
பாஜக அரசு நம் மீது தொடுத்து வரும் தாக்குதல்கள், மொழி ஒடுக்குமுறை, கலாச்சாரப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் காட்டப்படும் பாரபட்சம் மற்றும் தொகுதி மறுவரையறையினால் ஏற்படும் விளைவுகள் என அனைத்தையும், நமது ஒற்றுமையின் மூலம் நாம் முறியடிப்போம்.
இந்த உகாதிப் பண்டிகை ஒரு புதிய விடியலுக்குக் காரணமாக அமையட்டும்; 'திராவிட மாடல் 2.0' நிலைபெறட்டும்; அனைவரும் உகாதிப் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடட்டும் என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ