தமிழக மக்களுக்கு த.வெ.க. பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கும் - திமுகவில் இணைந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேட்டி
சென்னை, 19 மார்ச் (ஹி.ச.) பாரதிய ஜனதா கட்சியில் இருந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார். இந்த நிலையில் த.வெ.க.வில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார், அ
தமிழக மக்களுக்கு  த.வெ.க. பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கும் - திமுகவில் இணைந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேட்டி


சென்னை, 19 மார்ச் (ஹி.ச.)

பாரதிய ஜனதா கட்சியில் இருந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார்.

இந்த நிலையில் த.வெ.க.வில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார், அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (19.03.2026) திமுகவில் இணைத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சனா நாச்சியார் கூறியதாவது,

திராவிட முன்னேற்றக் கழகத்தில் கட்சியின் தலைவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று என்னை இணைத்துக் கொண்டேன். பெரியாரின் சிந்தனை, அண்ணாவின் அறிவுறுத்தல், வழிகாட்டுதல், கலைஞரின் பாரம்பரியம் இது எல்லாம் கலந்த ஒரு இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த இயக்கத்தில் பயணிக்கிறது பயணிக்கத் தொடங்குவதே எனக்கு ரொம்ப ஒரு பெரிய வாய்ப்பாகவும் அருமையான ஒரு திராவிட இயக்கத்தில் என்னை இணைத்துக் கொள்வது ரொம்ப பெருமையான ஒரு விஷயமாகப் பார்க்கிறேன்.

மக்கள் பணி என்பது ஒரு பெரிய பொறுப்பு. அரசியலில் ஒவ்வொருத்தரும் பயணிக்கிறது குறிப்பாகப் பெண்கள் பயணிக்கிறது பாதுகாப்பும் பொறுப்பும் இருக்க வேண்டிய ஒரு விஷயம். அத்தகைய ஒரு முடிவை எடுத்தது அந்த மாதிரி சூழ்நிலை இருக்கும் காரணத்தினால் தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி இன்று என்னைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டேன். பெண்களுக்குப் பாதுகாப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர வேற எந்த கட்சியாலும் கொடுக்க முடியாது.

புதுசா ஒரு கட்சி வருகிறது மாற்றம் கொடுக்கப் போகிறது என மக்கள் இளைஞர்கள் எல்லாரும் இவ்வளவு எழுச்சியோடு வந்த தமிழக மக்களுக்கு த.வெ.க. பெரும் ஏமாற்றத்தைக் கொடுப்பதற்குத் தான் இந்த தேர்தலில் வருகிறார்கள் என நினைக்கிறேன்.

மக்களுக்கு எந்த விதத்திலும் ஏமாற்றமும் கொடுக்க விட மாட்டோம். பெண்களுக்கு எந்த விதத்திலும் அவமரியாதையும் செய்வதற்குத் தமிழ்நாட்டுப் பெண்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் குறிப்பாகப் பெண்களை அவமதிப்பை நான் முற்றிலும் எதிர்க்கிறேன்.

அத்தகைய வழியில் தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி இன்றைக்கு நான் திமுகவில் இணைத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b